நீயா?வும் தனியா படம்பாக்க போன நானாவும். 1979
நேற்று கோவை தெருக்களில் போஸ்டர்களை வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது கண்ணில் சிக்கியது தான் "நீயா?" பட போஸ்டர். ஸ்ரீ பிரியாவின் அதி அற்புத கவர்ச்சி படத்தோடு ஒரு திகில் கலந்து இருந்தது. போஸ்டரின் ஓரத்தில் கமலின் புகைப்படம். முக்கால்வாசி போஸ்டர்களில் கமலும் இல்லை, சொலோவாக ஸ்ரீ பிரியா மட்டுமே.
ராயல் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்தது. அட ராயல் தியேட்டரா, போனதே இலையே என்று வண்டியை கிளப்பினேன். நல்ல விலாசமான தியேட்டர். 30ரூபாய்க்கு பால்கனி. சீட்டிங் எல்லாம் நன்றாகவே இருந்தது.
கம்மிங் டூ தி படம்:
படத்தின் கதை "ரெண்டு பாம்புக் காதலர்கள் ஸ்ரீ பிரியாவும் இன்னொரு பெயர் தெரியாத ஒரு ஆளும்". ரெண்டு பெரும் சேந்து ஜல்சா பண்ண காத்துக்கொண்டு இருக்கும் போது, பாம்பு ஆராய்ச்சியாளரான கமலும் அவரது நண்பர்களும் அந்த ஜல்சா குமாரு பாம்பை கொன்று விடுகிறார்கள். அந்த பாம்பும் சாகும் போது "ஐந்து பேரையும் பழிவாங்கு" என்று ஸ்ரீ பிரியாவிடம் சத்தியம் வாங்கி விட்டு உயிர் மாய்த்து விடுகிறது. அப்புறம் என்ன, ஒரு செம்ம கில்மா பாட்டு, ஒரு கொலை, அப்புறம் "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்" பாட்டுல கொஞ்சம் கில்மா , ஒரு கொலை, மறுபடியும் ஒரு குட்டி கில்மா பாட்டு , ஒரு கொலை. நடுவுல ஒரு சாமியார் (நம்பியார்) கிட்ட கமலும் மற்ற நண்பர்களும் போய் தாயத்து வாங்கி கட்டிக்கறாங்க. சாமியாரோட ஷிசியர் சுருளிராஜன் காமெடி எல்லாம் பண்ணுறார். அந்த பாம்பு கொஞ்சம் டிராஜடி எல்லாம் பண்ணி அந்த தாயத்தை ஒவ்வொருவரா கல்ட வெச்சு கில்மா பாட்டுகளுக்கு இடையே கொல்லுது. கடைசியா கமலஹாசனை மட்டும் கொள்ள முடியாம மனம் திருந்தி செத்து போகுது. பினிசிங்குலையும் ஒரு குட்டி கில்மா பிட்டு.
கதையை விடுங்க இன்னமும் இந்த பழிவாங்குற கதை எல்லாம் வந்துகிட்டே தான் இருக்கு.
அதுவும் அதே மாரியான டையலாக் டெலிவரி எல்லாம் இன்னமும் இருக்குங்கறது அந்த பாம்புக்கே வெளிச்சம்.
ஹைலைட் ஆஃப் தெ ஸோ என்னன்னா. இந்த படத்துல கமலஹாசன் சாமி எல்லாம் கும்புடுறார். சாமியார் கிட்ட தாயத்து வாங்கி கட்டிக்குறார். அதுவும் ஒரு டயலாக் அந்த பாம்ப பார்த்து பேசுவாரே "என் உயிர எடுக்கற உரிமை உனக்கில்லை அந்த "ஆண்டவனுக்கு" தான் இருக்கு" செம்ம..
(எப்போ உலக நாயகன் பகுத்தறிவு சிந்தனையாளர் ஆனார்னு தனியா ரிசர்ச் பண்ணலாம்னு இருக்கேன்)
இந்த படம் பார்த்த பிறகு தான் தெரியுது தமிழ் சினிமா இந்த 35 வருசத்துல பெரிய மாற்றம் ஒன்னும் பெறலைன்னு.
அந்த கொஞ்சூண்டு மாற்றங்கள் என்னன்னா:
1. கமல் பகுத்தறிவாலரா மாறி உலக நாயகன் ஆய்ட்டாரு.
2. படம் பூரா வந்த நெறைய துணி போட்டு ஆடுற ஐட்டம் சாங்க கிளைமாக்சுக்கு முன்னால் ரீல்ல கொஞ்சம் துணி போட்டு ஆடுற மாறி வளர்ச்சி அடஞ்சிறுச்சு.
3. கொஞ்சம் கூட இடைவெளி விடாம ஒரே இன்ஸ்ட்ருமென்ட்டுல போடுற "த்ரா தேர தேர.." இரைச்சல் இசை இல்லாம, இப்போ பல இன்ஸ்ட்ருமென்ட்டுல இரைச்சல் போட ஆரம்பிச்சுட்டாங்க.
4. டெக்குனிக்கலி நல்ல வளர்ச்சி.
5. கதை சொல்லல்ல மிக முக்கிய மாற்றம் என்னனா. அப்போ எல்லாம் படம் ஆரம்பிச்ச உடனே கதை தொடங்கி மொக்க போடுது. இப்போ எல்லாம் படம் ஆரம்பிச்சு 1.30 மணி நேரம் மொக்கை போட்டுட்டு கடைசி அரைமணி நேரம் கதை சொல்லி "எண்டர்ர்ர்டைனர்ர்ர்ர்" ஆக்கிடுறாங்க.
இன்னும் மாறாம என்ன என்ன இருக்குன்னா:
1. ஹீரோவை கொள்ள அல்ல வில்லனை கொள்ள யார் கைலையாவது துப்பாக்கி கிடைத்தால் உடனே சுடாமல், நாலு மணி நேரம் பேசி , கார் எடுத்துட்டு கிளம்பி ஒரு பாழடைந்த லொக்கேஷனுக்கு போய் போட்டுத்தள்ள முயற்சி பண்ணி தோற்றுப்போவது.
2. "இந்த பொண்ணுகளே இப்படி தாங்கற" வசனம் மட்டும் அப்ப இருந்து இப்ப வரைக்கும் நோ மாற்றம் .
"கற்பு போயிருச்சு, பத்தினி சாபம், சுமங்கலி" அப்டி இப்டின்னு பெண்ணியம் வளர்க்கும் வசங்கள் எல்லாம் டைரக்ட்டா இருந்து இப்போ இன்டைரக்டா "ஒழுக்கம், அடக்கம், புனிதம் உண்மையா இருத்தல்னு" மாறிருச்சு.
(இதில் கமல் பேசும் ஒரு வசனம்: "ஒரு பெண் சொத்தோட வாழுறததை விட பெருமை, சுமங்கலியா வாழுறது தான்".
அப்போ பொண்ணு சொத்துல பங்கு கேக்க கூடாதோ..?)
அப்போ பொண்ணு சொத்துல பங்கு கேக்க கூடாதோ..?)
3. அப்புறம் கேப்பே விடாம ஏதாவத வாசுச்கிட்டே இருக்குறது. ( இப்போ கொஞ்சம் பரவால்ல)
4. "எதுகை மோனையாய்" மொக்கைய டையலாக் பேசுறது.
உதாரணம் இந்த படத்துல கமல் தன் நண்பரை பார்த்து பேசும் ஒரு வசனமும் அதன் எதிர் வார்த்தையும்.
கமல் : இப்போ சொல்லு நான் பாவியா , இல்லை துரோகியா
நண்பர்: இல்லடா "தியாகி"
( இப்போ இது போன்ற வசங்கள் எல்லாம் சந்தானம் காமெடி ஆகிவிட்டது ஆறுதல்)
5. இன்னமும் காதல் பாட்டுனா கடற்கரையில் ஓடுறது , மரத்தை சுத்துறது.. லாங்க் சாட் சிலாவுட்டுகள்...
6. மிக முக்கியமாய் லிப் கிஸ் கொடுக்க ரெண்டு பேரும் ரொம்ப ரொமான்ஸ் பண்ணி முக்கி பக்கத்துல வந்து "வேணாம்னு" திரும்பிக்கிறது.. அப்புறம் கிஸ் கொடுக்கும் போது பின் மண்டையை பயங்கரமா காமிக்குறது.. ( இப்போ கொஞ்சம் "துணிச்சலான படம்" அப்டின்னு உதட்டை கடிக்குறததை காட்டிருராங்க)
7. கதையில் நெசமாலுமே வில்லன் மேலையே நியாயம் இருந்தாலும் ஏதாவது சம்பந்தமே இல்லாம காட்டி அவனை கெட்டவன் ஆக்கி, எல்லா டுபாக்கூர் வேலையும் பார்த்த கிரிமினலை ஹீரோவா காட்டுறது.
8. அப்புறம் சாகும் போது ஓவர் ரியாக்ஷன் காட்டி ஏதாவது மொக்க டயலாக் பேசி சாகுரது. ( இப்போ கூட ஒரு படத்துல MS பாஸ்கர் அப்டி ஒன்னு பேசுனாப்ல. பக்கத்து சீட்ல உக்காந்துட்டு நிதீஷ் குத்துச்சு குத்துச்சு சிருச்சான்)
9. பாட்டு வெக்கணும்னே ஒரு சீன் எழுதி, பாட்டு வெச்சு கொல்லுறது.
10. அப்போ லைட்டிங் , சேடோ பத்தி எல்லாம் பெருசா யாரும் கவலை பாடலை போல. எல்லா பிரேமிலையும் மூஞ்சி நல்லா தெருஞ்சா போதும்னு எடுத்திருப்பாங்க போல. இப்பவும் அதே மாறி எடுத்து கொல்லுறாங்க. ஆனா அந்த அளவுக்கு மோசமா லைட்டிங் வெக்குறது இல்லை.
11. தேவையே இல்லாமல் எல்லாருக்கும் மேக் அப் போட்டு பயங்கரமா காமிக்குறது. இயல்பு தன்மையே இல்லாமல் மிக கேவலமாக இருப்பது இந்த மேக்கப்புகளே ( லேட்டஸ்டா ஆர்யாவும் , நயன்தாராவும் நடுச்சங்களே அந்த படத்துல இப்புடித்தான் கொன்னு எடுத்திருப்பாங்க.)
12. இன்னும் பல....
-சுஜித் நா சுப்பு
