வாழ்வில் மிகவும் ரசித்த , அனுபவித்த மரண வினாடிகள்:
"ஆனால் வாழ்வில் எனக்கு இப்படி ஒரு ரசனை வந்ததே இல்லை...
இன்று இது நடக்கப்போகிறது , அது தவறான ஒன்றாக இருந்தால் இயற்கையாகவே பல தடங்கல்கள் வரும் , ஆனால் அதையும் தாண்டி இன்று மரணத்தை ரசித்து வந்தேன்....
இன்று கோவையில் இருந்து திருப்பூர் வர முதலில் பேருந்தில் வரலாம் என்று நானும் முகுந்தனும் முடிவு செய்தோம் ஆனால் கோகுல் வருகிறான் என்பதற்க்காக 'சரி.. பைக்கிலேயே போகலாம்' என்று முடிவுசெய்து கிளம்பினோம்.
சரி போகிறவழியில் எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம் என்று கிளம்பினோம்.
முதலில் வந்த இரு 'பங்க்'குகளிலும் பெட்ரோல் இல்லை என்று அனுப்பி விட்டார்கள். வண்டி "ட்ரை" ஆகும் நிலையில் இருந்தது. கடைசியாய் ஹைவேயில் இருந்த ஒரு பங்கில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு தொடர்ந்தோம்.
மழை பெய்வது போன்ற அற்புதமான காலநிலை இருந்ததால் நின்று பேசிவிட்டு கிளம்பலாம் என்று ஒரு வயல்வெளி ஓரமாய் வண்டியை நிறுத்தி புகைப்படம் எடுக்க துவங்கினோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்துவிட்டது. மழை தூர தொடங்கியதால் கிளம்பலாம் என்று அங்கிருந்து கிளம்பினோம்.
கிளம்பிய 10வது நிமிடத்திலேயே முழுதாய் நனைந்துவிட்டோம். தெக்களூர் பிரிவில் கோகுல் பிரிந்துவிட்டதால் , வஞ்சிப்பாளையம் வழியாய் வந்து முகுந்தானை வீட்டில் விட்டேன்.
வரும் வழியில் தான்
"மாப்ள வண்டில இருந்து விழுந்து மூணு வருசத்துக்கு மேல ஆகுது டா....
யோசிச்சு பாரேன், விழுகும் போது அப்டியே அம்மா , அப்பா,... குடும்பமே... நம்ம கண்ணு முன்னால தெரியும் பாரு... அப்டி ஒரு அனுபவம் எங்கயுமே கிடைக்காதுடா..." என்று பேசிக்கொண்டு வந்தோம்.
அவனை இறக்கிவிட்டவுடன் எங்களுக்குள் நடந்த உரையாடல்:
முகு: டேய்.. உள்ள வந்து தலைய துவட்டிவிட்டு, மழை நின்னதுக்கு அப்புறம் போடா
நான்: போடா வெளக்கென்ன... முழுசா நாலஞ்சத்துக்கு அப்புறம் எதுக்குடா முக்காடு...
இப்டியா அழுத்தி புதுசான்னா நேர வீடு போய் தான் வண்டி நிக்கும்...
முகு: அப்டிங்கரியா...? சரி பாத்து போ...
நான்: சரி.. போய்ட்டு வரேன்....
அதுவரை முகுந்தன் ஓட்டிக்கொண்டு நான் பின்னால் அமர்ந்து வந்ததால் குளிர் தெரியவில்லை. நான் ஓட்ட தொடங்கியபோதுதான் உடம்பெல்லாம் விரைத்துவிட்டது.
எப்படியோ சமாளித்து வீட்டுக்கு பக்கத்தில்... இன்னும் 2 கிமீ போனால் வீடு..
மெயின் ரோட்டில் இருந்து இடது புறமாய் திரும்பி நேராக வந்தால் "யூனிவர்சல்" திரையரங்கம் கண்ணுக்கு பட்டது.
அங்கே ஒரு இந்தி படம் ஓடிக்கொண்டு இருந்தது.
"அடப்பாவிகளா அதுக்குள்ள "ராவண தேசத்தை" தூக்கிட்டீங்களேடா என்று வருத்தப்பட்டுவிட்டு...
இடது பக்கம் வலையும் சாலையில் திரும்புகிறேன் முன்னால் பள்ளத்தில் மொத்தமாய் தண்ணீர்...
" எங்க குளி இருக்கும்ணே தெரியையே..?"
என்று அதை லாவகமாய் கடந்து முன் பக்கம் பார்த்தால் மற்றுமொரு பள்ளம்...
வண்டியின் வேகம் 60கிமீ இருக்கும்...
அந்த பல்லத்தில் நடக்கக்கூடாது எண்டுறு ஒருவர் வலது பக்கமாய் கிட்டத்தட்ட நாடு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருததார்....
அவரை பார்த்தவுடன் ஒரு நொடி.....
.
.
"அண்ணாஆஆஆ......
வண்டியை இடப்புறமாய் திருப்பி அங்கிருந்த குழியில் வண்டியை விட்டு அப்டியே ரோட்டில் இரண்டு கைகளும் தர தர என தேய்துக்கொண்டு "பொத்" என விழுந்தேன்...
என் முதுகில் லாப்டாப் பை.
முன்னால் நெஞ்சில் காமிரா பை நசுங்குகிறது...
என்முகம் தார் சாலியோடு ஒட்டி கிடக்கிறது....
ஒரு நொடி தான் "கீச்....." என்று ஒரு சத்தம்...
திருபுகிறேன்...
பின்னால் வந்துக்கொண்டிருத்த ஒரு டெம்போவின் முன் சக்கரம் என் முகத்துக்கு நேராய் உள்ளது..
இரண்டு அடி கூட இருக்காது....
நான் விழுந்ததையே அப்போது தான் சுதாரிக்கிறேன்...
டெம்போ நின்று விட்டது...
யாரோ பின்னால் ஓடுகிறார்கள்....
நான் அந்த சக்கரத்தையும் சாலையயும் பார்க்கிறேன்....
அம்மா , அப்பா... யாருமே கண் முன் வரவில்லை...
எனக்கு அப்படியே அங்கேயே படுத்து தூங்கிவிடலாம் போல் இருந்தது....
சுதாரித்துக்கொண்டேன் நான் சாகவில்லை என்று...
ஆனால் எழுந்திரிக்க மனம் வரவில்லை...
எனக்கு "நான் இன்னும் வாழப்போகிறேன்" என்று சந்தோசம்... சிரிப்பு வருகிறது....
பின்னால் இருந்து யாரோ வண்டியை தூக்கிவிட்டு... 'தம்பி எந்திரிங்க' என்று வந்து தூக்கினார்....'
எனக்கு அங்கயே படுத்து உறங்க வேண்டும் போல் இருந்தது....
அவ்வளவு நிம்மதியாய்...."
எழுந்து உள்ளங்கையை தான் முதலில் பார்த்தேன்... ஒரு காயம் கூட இல்லை....
என்னை தூக்கிவிட்டவரை பார்த்து ஒரு சின்ன சிரிப்பு சிரித்து "நன்றி அண்ணா என்றேன்"
அதற்க்கு பின் எப்போதும் போல் நல விசாரிப்புகளோடு...
'தம்பி நான் வேனா வீட்ல கொண்டு வந்து விடவா...?
"இல்ல வேணாம் நா.... நான் போய்க்கிறேன்..." என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து முட்டியில் இருந்த சிறு காயத்துக்கு மட்டும் மருந்து போட்டுவிட்டு...
அங்கே நடந்ததை மீண்டும் நினைத்துப்பார்த்தேன்....
அட இவ்ளோ தாண்டா வாழ்க்கை...
அதுக்குள்ள எத்தன போராட்டம்....
மனச நிம்மதியா வச்சிருந்தா மரணம் கூட சினிமா மாறி ரசிக்க முடியும் என்று தோன்றியது...
உணர்வு - சுஜித் நா சுப்பு



