Saturday, 30 August 2014

வீடு


வீடு படத்தினுடைய ஸ்டில் இது. 
இதே புகைப்படம் பாலுமகேந்திரா அவர்களின் சினிமா பட்டறையில் முதல் மாடி படிக்கட்டின் திருப்பத்தில் மாட்டப்பட்டிருக்கும். 
அதாவது நாம் படி ஏற தொடங்கினால் நமக்கு நேர் எதிர் சுவற்றில் இந்தப்படம் இருக்கும்.. கொஞ்சம் அண்ணார்ந்து பார்க்க வேண்டும்... 
மாலை ஐந்தரை மணி அளவில் அப்படியே மஞ்சள் ஒளி அந்த புகைப்ப்டத்தில் விழும்.. 
பாதி புகைப்படத்தில் அந்த ஒளி விழுந்து ஒரு அலாதியான உணர்வை உண்டாக்கும்... 
அப்படியே நின்று அதை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்..
 வீடு படமும் அந்த மழைக்கால சீன்களும் வரிசையாய் நம் மனதில் ஓடும் , இளையராஜாவின் இசையோடு....!
சினிமா பட்டறை சென்றால் இந்த புகைப்படத்தை நின்று ரசித்து பாருங்கள்...

Friday, 29 August 2014

எதார்த்தமான "மாஸ்"


விருமாண்டி படத்தில் ஒரு நீதிமன்ற காட்சி இருக்கும்.
தலைமறைவாய் இருக்கும் விருமாண்டியை ஊர்மக்கள் அடித்துக்கொள்ள கோபத்தோடு நீதிமன்ற வளாகத்தில் விருமாண்டியின் வருகைக்காக காத்திருப்பார்கள். அப்போது வக்கீல்  தனது காரில் மறைத்து விருமாண்டியை அழைத்து வருவார்.
மிக எதார்த்தமாக அந்த காட்சி படமாக்கப்ட்டிருக்கும்.
அந்த வக்கீலின்  வசனங்களாகட்டும் அதற்க்கு பின் விருமாண்டியின் ரியாக்ஷான்ங்களும் எதார்த்தமாக இருக்கும். 

விசாரணையின் போது விருமாண்டிக்கு திருமணம் செய்து வைத்த பூசாரி பொய் சாட்சியம் அளிக்கும் போது , அப்படியே தன் விரலில் இருந்து விருமாண்டி கொடுத்த மோதிரத்தை மறைப்பார்.
இது படம் பார்ப்பவருக்கு விருமாண்டியின் ஏமாற்ற மன நிலயை உணர்த்துவதற்க்காக அற்புதமாக காட்டப்பட்டிருக்கிருக்கும்.
அந்த இடத்தில் முழுதாய் விருமாண்டியின் ஏமாற்றத்தையும், கையால்காத சூழ்நிலையையும் உணருவோம். அதன் பிறகு விருமாண்டி அதை நினைத்து கண் கலங்கும் காட்சி உண்டு.
அப்போதும் படத்தின் இறுதியிலும் விருமாண்டி அழும்போது தனது துண்டையும் வேட்டியையும்  தூக்கி அதில் கண்களை துடைப்பார். இது மேலும் அந்த காட்சியின் நம்பகத்தன்மையையும் எதார்த்தத்தையும் அதிக்கப்படுத்தும்.

படத்தின் பலமே அந்த எதார்த்தம் தான். ஒவ்வொரு இடத்திலும் அந்த கதாபாத்திரம் கமல் இல்லை, விருமாண்டி தான் என்று நமக்கு உணர்த்தும். கமலின் சாயல் குறைக்கப்பட்டிருக்கும்.

அதே போல் "மாஸ்" என்று ஒரு வார்த்தை இப்போது பிரபலாமாகி வருகிறது . நடந்தாலே மாஸ் என்று காதை கிழிக்கும் இசையை போட்டு சுலோ மோஷனில் காட்டுகிறார்கள்.

நான் கடைசியாய் பார்த்த மாஸ் காட்சி என்றால் அது விருமாண்டி படத்தில் வரும் இறுதி சிறை சண்டை காட்சிகள் தான்.
அந்த கதவை உடைக்க எல்லாரும் அடுப்பை தூக்கி கொண்டு கிளம்பும் காட்சி தெரி..!.

அந்த சிறை சண்டை செம்ம விறு விறுப்பாய் இருக்கும் , அதற்க்கு காரணம் அதற்க்கு முன்னால் படத்தில் அந்த அளவுக்கான மாஸ் சீன்கள் (குறிப்பாய் சுலோ மோசனும் தெறிக்கும் இசையும்) இல்லை. அதற்க்கான தேவையும் இல்லை (ஆரம்பத்தில் விருமாண்டியின் கரண்ட்டு கம்ப குரங்கு சேட்டை தவிர்த்து). வேண்டும் என்றால் விருமாண்டியை பற்றி வெறும் வசங்களில் மட்டும் பெருமை பேசி விட்டு.. பல இடங்களில் மொக்கைத்தனமாக சுலோ மோஷன் போட்டு கைதட்டல் வாங்கி இருக்கலாம். ஆனால் படம் நன்றாக செதுக்கப்பட்டிருக்கும்.

அந்த நீதிமன்ற காட்சியையே இப்போது இருக்கும் தமாஸ் நடிகர்களை வைத்து மாஸ் காட்டுகிறேன் என்று எடுத்திருந்தால்....
"நீதிமன்றத்தில் வில்லன்களும் அவனது அடியாட்களும் விருமாண்டிக்காக கழுகுப்பார்வையோடு காத்திருக்க, அங்கே வரும் நீதிபதியின் வண்டியை மட்டும் பயத்தில் விட்டு விடுகிறார்கள்.
ரொம்ப நேரம் காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பும் வில்லனுக்கு முன்னால் அப்படியே நீதிபதிக்கு பின்னால் இருந்து ஹீரொ சுலோ மோஷனில் தலைகாட்ட ,இசை கிழிக்கும்.. விசில் பறக்கும்.. வில்லன் எதையாவது தூக்கி போட்டு உடைப்பார்..."

ஆனால் விருமாண்டி அப்படி இல்லை. செய்யாத தப்புக்கு தண்டனை பெரும் மனிதனின் அவலத்தை , மோசமான மனநிலையை , அவனது ஓட்டத்தை ஒவ்வொன்றாக கன்வே செய்து, அவன் பெரும் அடிகளை பார்வையாளனை நம்ப செய்து , அவன் காத்திருந்ததற்க்கான பலனாக அவனுக்கு கிடைக்கும் அந்த கடைசி வாய்ப்பின் போது அவனிடம் வெளிப்படும் ஆக்ரோஷம் தான் எதார்த்தமான "மாஸ்".

-சுஜித்

Monday, 28 July 2014

நீயா?வும் தனியா படம்பாக்க போன நானாவும். 1979





நேற்று கோவை தெருக்களில் போஸ்டர்களை வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது கண்ணில் சிக்கியது தான் "நீயா?" பட போஸ்டர். ஸ்ரீ பிரியாவின் அதி அற்புத கவர்ச்சி படத்தோடு ஒரு திகில் கலந்து இருந்தது. போஸ்டரின் ஓரத்தில் கமலின் புகைப்படம். முக்கால்வாசி போஸ்டர்களில் கமலும் இல்லை, சொலோவாக ஸ்ரீ பிரியா மட்டுமே. 
ராயல் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்தது. அட ராயல் தியேட்டரா, போனதே இலையே என்று வண்டியை கிளப்பினேன். நல்ல விலாசமான தியேட்டர். 30ரூபாய்க்கு பால்கனி. சீட்டிங் எல்லாம் நன்றாகவே இருந்தது. 

கம்மிங் டூ தி படம்:
படத்தின் கதை "ரெண்டு பாம்புக் காதலர்கள் ஸ்ரீ பிரியாவும் இன்னொரு பெயர் தெரியாத ஒரு ஆளும்". ரெண்டு பெரும் சேந்து ஜல்சா பண்ண காத்துக்கொண்டு இருக்கும் போது, பாம்பு ஆராய்ச்சியாளரான கமலும் அவரது நண்பர்களும் அந்த ஜல்சா குமாரு பாம்பை கொன்று விடுகிறார்கள். அந்த பாம்பும் சாகும் போது "ஐந்து பேரையும் பழிவாங்கு" என்று ஸ்ரீ பிரியாவிடம் சத்தியம் வாங்கி விட்டு உயிர் மாய்த்து விடுகிறது. அப்புறம் என்ன, ஒரு செம்ம கில்மா பாட்டு, ஒரு கொலை, அப்புறம் "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்" பாட்டுல கொஞ்சம்  கில்மா  , ஒரு கொலை, மறுபடியும் ஒரு குட்டி கில்மா பாட்டு , ஒரு கொலை. நடுவுல ஒரு சாமியார் (நம்பியார்) கிட்ட கமலும் மற்ற நண்பர்களும் போய் தாயத்து வாங்கி கட்டிக்கறாங்க. சாமியாரோட ஷிசியர் சுருளிராஜன் காமெடி எல்லாம் பண்ணுறார்.  அந்த பாம்பு கொஞ்சம் டிராஜடி எல்லாம் பண்ணி அந்த தாயத்தை ஒவ்வொருவரா கல்ட வெச்சு கில்மா பாட்டுகளுக்கு இடையே கொல்லுது. கடைசியா கமலஹாசனை மட்டும் கொள்ள முடியாம மனம் திருந்தி செத்து போகுது. பினிசிங்குலையும் ஒரு குட்டி கில்மா பிட்டு.  

கதையை விடுங்க இன்னமும் இந்த பழிவாங்குற கதை எல்லாம் வந்துகிட்டே தான் இருக்கு.
அதுவும் அதே மாரியான டையலாக் டெலிவரி எல்லாம் இன்னமும் இருக்குங்கறது அந்த பாம்புக்கே வெளிச்சம்.

ஹைலைட் ஆஃப் தெ ஸோ என்னன்னா. இந்த படத்துல கமலஹாசன் சாமி எல்லாம் கும்புடுறார். சாமியார் கிட்ட தாயத்து வாங்கி கட்டிக்குறார். அதுவும் ஒரு டயலாக் அந்த பாம்ப பார்த்து பேசுவாரே "என் உயிர எடுக்கற உரிமை உனக்கில்லை அந்த "ஆண்டவனுக்கு" தான் இருக்கு" செம்ம.. 
(எப்போ உலக நாயகன் பகுத்தறிவு சிந்தனையாளர் ஆனார்னு தனியா ரிசர்ச் பண்ணலாம்னு இருக்கேன்)

இந்த படம் பார்த்த பிறகு தான் தெரியுது தமிழ் சினிமா இந்த 35 வருசத்துல பெரிய மாற்றம் ஒன்னும் பெறலைன்னு.

அந்த கொஞ்சூண்டு மாற்றங்கள் என்னன்னா:
1. கமல் பகுத்தறிவாலரா மாறி உலக நாயகன் ஆய்ட்டாரு. 
2. படம் பூரா வந்த நெறைய துணி போட்டு ஆடுற ஐட்டம் சாங்க கிளைமாக்சுக்கு முன்னால் ரீல்ல கொஞ்சம் துணி போட்டு ஆடுற மாறி வளர்ச்சி அடஞ்சிறுச்சு.
3. கொஞ்சம் கூட இடைவெளி விடாம ஒரே இன்ஸ்ட்ருமென்ட்டுல போடுற "த்ரா தேர தேர.." இரைச்சல் இசை இல்லாம, இப்போ பல இன்ஸ்ட்ருமென்ட்டுல இரைச்சல் போட ஆரம்பிச்சுட்டாங்க.
4. டெக்குனிக்கலி நல்ல வளர்ச்சி. 
5. கதை சொல்லல்ல மிக முக்கிய மாற்றம் என்னனா. அப்போ எல்லாம் படம் ஆரம்பிச்ச உடனே கதை தொடங்கி மொக்க போடுது. இப்போ எல்லாம் படம் ஆரம்பிச்சு 1.30 மணி நேரம் மொக்கை போட்டுட்டு கடைசி அரைமணி நேரம் கதை சொல்லி "எண்டர்ர்ர்டைனர்ர்ர்ர்" ஆக்கிடுறாங்க.

இன்னும் மாறாம என்ன என்ன இருக்குன்னா: 
1. ஹீரோவை  கொள்ள அல்ல வில்லனை கொள்ள யார் கைலையாவது துப்பாக்கி கிடைத்தால் உடனே சுடாமல், நாலு மணி நேரம் பேசி , கார் எடுத்துட்டு கிளம்பி ஒரு பாழடைந்த லொக்கேஷனுக்கு போய் போட்டுத்தள்ள முயற்சி பண்ணி தோற்றுப்போவது.
2. "இந்த பொண்ணுகளே இப்படி தாங்கற" வசனம் மட்டும் அப்ப இருந்து இப்ப வரைக்கும் நோ மாற்றம் .
 "கற்பு போயிருச்சு, பத்தினி சாபம், சுமங்கலி" அப்டி இப்டின்னு பெண்ணியம் வளர்க்கும் வசங்கள் எல்லாம் டைரக்ட்டா இருந்து இப்போ இன்டைரக்டா "ஒழுக்கம், அடக்கம், புனிதம் உண்மையா இருத்தல்னு" மாறிருச்சு. 
(இதில் கமல் பேசும் ஒரு வசனம்: "ஒரு பெண் சொத்தோட வாழுறததை விட பெருமை, சுமங்கலியா வாழுறது தான்".
அப்போ பொண்ணு சொத்துல பங்கு கேக்க கூடாதோ..?)
3. அப்புறம் கேப்பே விடாம ஏதாவத வாசுச்கிட்டே இருக்குறது. ( இப்போ கொஞ்சம் பரவால்ல)
4. "எதுகை மோனையாய்" மொக்கைய டையலாக் பேசுறது. 
உதாரணம் இந்த படத்துல கமல் தன் நண்பரை பார்த்து பேசும் ஒரு வசனமும் அதன் எதிர் வார்த்தையும்.
கமல் : இப்போ சொல்லு நான் பாவியா , இல்லை துரோகியா 
நண்பர்: இல்லடா "தியாகி"
( இப்போ இது போன்ற வசங்கள் எல்லாம் சந்தானம் காமெடி ஆகிவிட்டது ஆறுதல்)
5. இன்னமும் காதல் பாட்டுனா கடற்கரையில் ஓடுறது , மரத்தை சுத்துறது.. லாங்க் சாட் சிலாவுட்டுகள்... 
6. மிக முக்கியமாய் லிப் கிஸ் கொடுக்க ரெண்டு பேரும் ரொம்ப ரொமான்ஸ் பண்ணி முக்கி பக்கத்துல வந்து "வேணாம்னு" திரும்பிக்கிறது.. அப்புறம் கிஸ் கொடுக்கும் போது பின் மண்டையை பயங்கரமா காமிக்குறது.. ( இப்போ கொஞ்சம் "துணிச்சலான படம்" அப்டின்னு உதட்டை கடிக்குறததை காட்டிருராங்க)
7. கதையில் நெசமாலுமே வில்லன் மேலையே நியாயம் இருந்தாலும் ஏதாவது சம்பந்தமே இல்லாம காட்டி அவனை கெட்டவன் ஆக்கி, எல்லா டுபாக்கூர் வேலையும் பார்த்த கிரிமினலை ஹீரோவா காட்டுறது. 
8. அப்புறம் சாகும் போது ஓவர் ரியாக்ஷன் காட்டி ஏதாவது மொக்க டயலாக் பேசி சாகுரது. ( இப்போ கூட ஒரு படத்துல MS பாஸ்கர் அப்டி ஒன்னு பேசுனாப்ல. பக்கத்து சீட்ல  உக்காந்துட்டு நிதீஷ் குத்துச்சு குத்துச்சு சிருச்சான்)
9. பாட்டு வெக்கணும்னே ஒரு சீன் எழுதி, பாட்டு வெச்சு கொல்லுறது.
10. அப்போ லைட்டிங் , சேடோ பத்தி எல்லாம்  பெருசா யாரும் கவலை பாடலை போல. எல்லா பிரேமிலையும் மூஞ்சி நல்லா தெருஞ்சா போதும்னு எடுத்திருப்பாங்க போல. இப்பவும் அதே மாறி எடுத்து கொல்லுறாங்க. ஆனா அந்த அளவுக்கு மோசமா லைட்டிங் வெக்குறது இல்லை. 
11. தேவையே இல்லாமல் எல்லாருக்கும் மேக் அப் போட்டு பயங்கரமா காமிக்குறது. இயல்பு தன்மையே இல்லாமல் மிக கேவலமாக இருப்பது இந்த மேக்கப்புகளே ( லேட்டஸ்டா ஆர்யாவும் , நயன்தாராவும் நடுச்சங்களே அந்த படத்துல இப்புடித்தான் கொன்னு எடுத்திருப்பாங்க.)
12. இன்னும் பல....

-சுஜித் நா சுப்பு 



Saturday, 24 May 2014

கோச்சடையான் - மயிராண்டி பார்வை

கோச்சடையான் - மயிராண்டி பார்வை (ஸ்பாய்லர் ஆளார்ட்):




படத்தோட முதல் விமர்சனமே படத்தில் செய்யப்பட்டிருக்கும் அனிமேஷன் கிராபிக்ஷ பற்றியதாகவே படம் வெளியாவதற்க்கு முன்பு இருந்து வைக்கப்பட்டு வந்தது. நமக்கு அந்த அளவுக்கு எல்லாம் அறிவு கிடையாது. அனிமேஷன் சூப்பரோ சுமாரோ... அதை பற்றி பேச விருப்பம் இல்லை..
நானும் படம் நல்ல தான் இருக்கப்போகுது , படத்தை பார்த்துட்டு வந்து அதை பத்தி தப்பா பேசுனவங்களா எல்லாம் ஒரு 'வரு வருத்தெடுக்கலாம்னு' ஒரு மினிமம் நம்பிக்கையோடத்தான் படத்துக்கு போனேன்.

படம் துவங்கி ஒரு கால் மணி நேரம் ஏதோ கதை சொல்ல போறாங்க அப்டின்னு ஒரு ஆவலா இருந்தா அதுக்குளையே டமால் டுமீள்னு ஒரு மூணு நாலு டுவிஸ்ட்டு... கொய்யால படம் டக்கரு டோய் னு நிமிர்ந்து உக்காந்தா... அங்க தான் நம்ம அக்கா தீப்பிகா வராங்க...
அப்டியே ராணா மேல காதல் வயப்படுறாங்க.. இந்த நேரத்துல சரத்துக்குமாரு வேற ரஜினி தங்கச்சி மேலையே காதோல் வையப்படுறார்...
ஆரம்பித்தது காதல் அத்தியாயம்.. ஒரு மூணு காதல் பாட்டு...
அதுவும் எல்லாம் "எங்க போன ராசா" ஸ்டேயில்ல....
காதல் பண்ணி , பட்டு பாடி, ஆட்டம் ஆடி முடுச்சா ... மிடியலடா சாமினு இன்டெர்வல்...
அதுக்கு அப்புறம் பரவால்லா... படம் ஏதோ பிக்கப்பாகி , ஒருவழியா தடபுடா கிளைமாக்ஸ் சண்டையோட
சுபம்னு போடாம , தொடரும்னு போட்டு முடுச்சாங்க...

எனக்கு ஒரு மிகப்பெரிய டவுட்டு.. 
எதுக்கு இந்த கதையை அனிமேஷன்ல எடுக்கணும்.... இல்லை அனிமேஷன்ல எடுக்க இதைவிட சுவர்சியமான கதையே கிடைக்கிளையா... நெறையா தமிழ் சினிமாவுல பார்த்த அதே மாசாலா பேக்காப்தான் திரும்ப ரிபீட் ஆகி இருக்கிறது...
அதுவும் முதல் பாதியில் வரும் கல்யான காட்சிகள் எல்லாம் "ஓ மை காட்" என்பது போலவே இருந்தன...
இன்னும் திரைக்கதையில் சுவாரஸ்யமான விசயங்களை சேர்த்திருக்கலாம் போலவே தோன்றியது...
"மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, ரெண்டாவது , மூணாவது காதல் பாட்டு வரும் போது உங்களுக்கே 'என்னடா இது' னு ஒரு பீலிங்க வரல...?"
நாலு , அஞ்சு அழகான டுவிஸ்டுகள மட்டும் வைத்துக்கொண்டு மீதியில் கோட்டை விட்டது போலவே தோன்றியது.

"ஏன்டா ..த்த்தா.. படத்துல நல்லத எதுவேமே இல்லையாடா சு.. னு நீங்க கேக்குறது புரியுது..."
நாகேஷ் அவர்களோட கதாபாத்திரத்தை மீண்டும் உருவாக்கி இருந்தது அற்புத... யாருப்பா டப்பிங் பேசுனது.. அவ்ளோ ஆப்ட்டா இருந்துச்சு...
அப்புறம் கொஞ்சம் சுவார்ஸ்யமா இருந்தது இரண்டாம் பாதியில் கோச்சடையானின் பகுதி...
அனிமேசனுக்கான சரியான களம் அதுவே...
ராணாவை அடைத்து வைத்திருக்கும் சிறையில் மிருகங்களுடன் நடக்கும் சண்டை காட்சி கொஞ்சம் விறுவிறுப்பு.
படத்தின் கடைசி போர்க்கால காட்சி... பட்டாசு.. மொத்த படத்துக்கும் கடைசி சுறு சுறுப்பான "இது போதும்டா...!!" என்பது போலான பரபரப்பான ஒன்று....

இதுவரை நாம் கேட்காத கதையையோ , இல்லை இன்னும் சுவாரஸ்யமான புதுமையான நிகழ்வுகளுடன் கூடிய திரைக்கதையையோ அமைத்திருந்தால் கோச்சடையான் அட்டகாசமாய் அமைந்திருக்கும்...
அனிமேஷன்ல , இந்தியன் மோஷன் கேப்சரிங்ல இது ஒரு மைல்க்கல் தான்...
என்ன தான் ஆகா தூக்கா டெக்குநாலாஜியா இருந்தாலும் சுவார்ஸ்யமாக கதை சொல்லுவது தான் முக்கியம் தலைகளா...

பின் குறிப்பு : இது தனிப்பட்ட பார்வை மட்டுமே. விமர்சனம் அல்ல.. விமர்சனம் எழுதவும் மதிப்பெண் போடவும் பல அறிவுஜீவிகள் காத்திருக்கிரார்கள்.. சோ திஸ் இஸ் ஜஸ்ட் அ வ்யூ...
அப்பாலிகா நமக்கு யார் நெஞ்சையும் நக்க வேண்டிய அவசியமும் கட்டாயமும் இல்லை...

-Sujith N Subbu

Sunday, 4 May 2014

இல்லாமல் போய் விட்டது.

சுடுகாட்டுக்கு பக்கத்தில் இருந்த
எங்கள் குடிசை வீட்டுக்கு அருகில்
ஒரு வேப்பமரமும்,
அதை ஒட்டியே ஒரு
புலியமரமும் இருந்தது.
இன்று அந்த சுடுகாட்டில்
ரோடு போட்டு,
வீடு கட்டி,
போர் போட்டு,
தண்ணி எடுத்து,
சமச்சு தின்னு,
படுத்து தூங்கிட்டு இருக்காங்க.
வேப்பமரம் இருந்த இடத்தில்
பெயர்கள் செதுக்கப்பட்ட கல்வெட்டும்,
புலிய மரம் இருந்த இடத்தில்
பெரிய குப்பை தொட்டியும் இருக்கிறது.
எங்கள் வீடு இருந்த இடம்
ரோடாய் மாறி, சாயலே
இல்லாமல் போய் விட்டது.

-சுஜித்

Monday, 28 April 2014

நான் சிகப்பு மனிதன் - "பட்டி டிங்கரிங்" ரொம்ப அவசியம் 



நான் சிகப்பு மனிதான் படம் பார்த்தேன். ரொம்ப நாளுக்கு அப்புறம் தியேட்டரில்  ஒரு U/A படம் பார்ப்பதால் கொஞ்சம் சந்தோசம் . 
புதுசா தூங்குற வியாதிய மையமாவெச்சு ஒரு படம் பண்ணி இருக்கோம்னு டீசர், ட்ரைலர் எல்லாம் சொன்னனாள போனேன்.
படம் முடுஞ்சதுக்கு அப்புறம் படம் எப்புடி இருக்குனு கேட்டா "புதுசா எடுக்க முயற்சி பண்ணி இருக்காங்க" அப்டின்னு மட்டும் தான் சொல்ல முடிஞ்சுது. 
நெறய இடங்களில் படம் "தகிடுதாக்காம்" போடுது. 

திருவோட மூணு படங்களிலும் சரி , முக்கிய கதாபாத்திரம் விஷாலோட குணாதிசயங்களை நல்ல டீடேல் பண்ணி இருப்பார். மூணு படத்துளையும் ஹிரோவுக்கு தனி குணாதிசயங்கள் உண்டு. 

பட் மூணு படத்துளையுமே ஒரு கதையை எப்படி சுவாரஸ்யமா சொல்லணும்கிற யுக்தி இவருக்கு தெரியவே இல்லனு தான் தோணுது. அத இவர் கத்துகிட்ட மாறியும் தெரியல.

என்னா.. நான் சிகப்பு மனிதன்ல சரியா இரண்டாம் பாதி தொடங்கியவுடன் திடீர் என்று "இனியா"வின் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டு முதல் பாதிக்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு கதை ஒடுகிறது. (கிட்டத்தட்ட டீவி சீரியல் மாறி இருந்துச்சு)
இந்த இரண்டாம் பாதி ப்ளாஸ்பேக்கோடு நம்மாள் துளி கூட ஒன்ற முடியவில்லை.
அதுவரை நாம் வேறு ஒரு படத்தை பார்த்துக்கொண்டிருந்தோம். 

இதே போன்ற ஒரு தவறைத்தான் "சமர்" படத்திலும் செய்திருந்தார். படம் முடியும் தருவாயில் இரண்டு மொக்கை வில்லன்களை அறிமுகம் செய்து மொத்த படத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாதபடி  செய்திருந்தார்.

படத்தில் அடுத்து வரப்போகும் கதாபாத்திரங்களுக்கு முன் கூட்டியே ஒரு சின்ன ஸ்பார்க்கோ அல்லது க்ளுவோ கொடுத்து வைத்திருந்தால் தான் படம் பார்க்கும் பார்வையாளானால் அந்த கதாபாத்திரம் அறிமுகம் ஆகும் போது "இவனா அவன்" என்றாவது சுதாரித்து ஒன்ற முடியும்.

சின்ன உதாரணம் "சூதுக்கவ்வும்" 
இரண்டாம் பாதியில் அறிமுகம் ஆகும் இன்ஸ்பெக்டர் பிரம்மாவை பற்றி ஒரு சின்ன க்ளுவாக படத்தின் தொடக்கத்தில் "சிம்ஹா நயன்தாராவுக்கு கோவில் கட்டினார்" என்கிற செய்தியை படிக்கும் போதே 'பிரம்மாவை பற்றிய செய்தியயும் படிப்பார்"

தாஸ் கதாபாத்திரத்தின் அண்ணாக வரும் "டாகடர் தாதா" பற்றிய ஒரு கிசு சிசுவை காரில் சென்றுகொண்டிருக்கும் போது அப்படியே எதாற்ச்சியாய் குமுதத்தில்  படிப்பது போல் ஒரு ஷாட் உண்டு.

இந்த இரண்டு கதாபாத்திரங்களும் இரண்டாம் பாதியில் மட்டுமே வந்தாலும் அதனுடய அறிமுகம் முதல் பாதியிலேயே இருக்கிறது. ஏற்கனவே இவர்கள் நமக்கு கொஞ்சம் அறிமுகம் ஆகிவிட்டதால் நம்மால் அதை எதுக்கொள்ள முடிகிறது.
ஆனால் திருவின் படங்களில் இவை சரியாய் செய்யப்படுவது இல்லை. 

இதனால் தான் நம்மாள் இரண்டாம் பாதியில் வரும் இனியாவின் கதையை முதல் பதியோடு நம்மாள் சம்பந்த படுத்திக்கொளவே முடியவில்லை. அப்படியான வாய்ப்புகளும் கொடுக்கப்படவில்லை.

எக்ஷ்ட்ரீமாக வெவ்வேறு கதை சொல்லும் போது இந்த பிரச்னை வருகிறது.
உதாரணம் அன்பே சிவம். அதில் கமலும் மாதவனும் ஏர்போர்டில் சந்தித்து அந்த இருவரின் பயணம் மட்டுமே சொல்லப்பட்டு வந்து கொண்டே இருக்கும். நாம் கதையோடு ஒன்றி படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது திடீர் என்று ஒரு ப்லாஷ்பேக் வைத்து அதில் மூணு பாட்டு, ஒரு சண்டை கட்சி எல்லார்த்தையும் வைத்து திரும்ப மீண்டும் முதல் கதைக்கு வரும்போது நாம் முன் சொன்ன கதை மொத்தத்தையும் மறந்துவிட்டு மீண்டும் புதுசாய் படம் பார்ப்பது போல் இருக்கும்.

படம் தொடங்கியவுடன் எறுச்சலை உண்டுபண்ணியது "இசை".
அந்த ரயில் காட்சிக்கு எதுக்கு ஏதோ பயங்கர பேய் , ரணம், கொடூரமா ஒரு இசை... காது கிளுஞ்சு மூக்கு ஒட்டிக்கிச்சு.
இன்னமுமா ரசிகர்கள் வெளிநாட்டு லொகேஷங்களை பார்க்க படத்துக்கு வராங்கன்னு நெனச்சுட்டு இருக்கீங்க? படத்துக்கு எந்த பாட்டுமே தேவை இல்லை.
அப்புறம் புதுசா சொல்லுறோம் , புதுசா சொல்லுறோம்னு நெறய பழய கிலிஷேக்கள். எப்பவும் போல கிளைமாக்ஸ்ல ஒரு சண்டை அதுல வில்லன்கள் அவுட்டு எல்லாம் மீடில...

இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி , திரைக்கதையை "பட்டி டிங்கரிங்" பார்த்து படம் எடுத்தால் அடுத்து ஒரு நல்ல படம் எதுக்கும் வாய்ப்பு 'திருவுக்கு'  உண்டு.
பார்ப்போம்...

-ரசனை கெட்டவன் 

நன்றி: கருந்தேள், வேர்ப்புழுக்கள்

Sunday, 27 April 2014

இது கமலஹாசன் மீதான விமர்சனம்



உன்னைப்போல் ஒருவன் படம் பார்த்தேன். படத்தில் வசனங்கள் என்னை மிகவும் ஈர்த்தது. படம் வெளியானதில் இருந்து இதையெல்லாம் கமலஹாசன் தான் எழுதியிருப்பார் என்று நினைத்து வந்தேன். 
நேற்று பார்க்கும் போது படம் முடிந்து க்ரெடிட்ஸ் ஓடும் போது நடிகர்கள் பெயரெல்லாம் கடந்த பின்பு "வசனம்: ரா. முருகன்" என்று வந்தது. 
படத்தின் துவக்கத்தில் அவர் பெயர் வரவில்லை. கமலஹாசன் , மோகன் லால் , லக்ஷ்மி (இவரை விட முக்கிய கதாபாத்திரங்கள் நிரய படத்தின் உண்டு) ஆகிய மூன்று நடிகர்களின் பெயரும் ,கலை இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு மற்றும் இயக்கம் ஆகியவர்களின் பெயர் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

படத்துக்கு வசனங்கள் அவ்வளவு முக்கியம் இல்லையோ..?
முக்கியம் தான். ஆனால் கமலஹாசன் படத்தில் அவரால் செய்யமுடிந்த வேலையை அவரை மீறி சிறப்பாய் ஒருவர் செய்தால் அது எவ்வள்வு பெரிய அபத்தம்.
கமலஹாசன் படங்களில் "கமல்" மட்டுமே துருத்திக்கொண்டு "அறிவுஜீவி" என்று வெளியே தெரிய வேண்டும்.

சிம்பிளான Title Card  வேண்டும் என்றால் எல்லாருடைய பெயரும் அல்லவோ கடைசியில் போட்டிருக்க வேண்டும். படத்தின் அதி முக்கிய பங்கான வசனம் எழுதியவரை மட்டும் இப்படி செய்வதை என்னவென்று சொல்வது.

கமல் மீது விமர்சனமே வைக்கக்கூடாது என்கிற மனோபாவத்தை அவரே உருவாக்குகிறார்.
தன்னுடைய படங்களில் அவர் மாபெரும் ஜீனியஸ் என்பதை வெளிக்கட்டியே ஆக வேண்டும் என்று செயல்படுகிறார்.

ராஜபார்வைக்கு பின் "அவர் முன்வந்து" எடுத்த படங்களில் முக்கால்வாசி, வெளிநாட்டு படங்களில் இருந்து சுடப்பட்டது என்பதற்க்கு ஆதாரங்களும் உண்டு. ( அப்பேடி எல்லாம் இல்லை 'கமல் உண்மையின் அவதாரம்' என்று கூறுபவர்கள் "கருந்தேள்" படிக்கவும்")

கமல் தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு எடுத்து செல்கிறார் என்பதெல்லாம் அவராய் உருவாக்கி வைத்திருக்கும் போலி பிம்பம். 
அவர் திரும்ப திரும்ப எடுப்பதெல்லாம் மசாலாக்களே.
அதை வைத்து அவர் பணம் பண்ணவே பார்க்கிறார்.
ரசிகர்களை ஒரு கூண்டுக்குள்ளேயே வைத்து  அதை மீறி சிந்திக்கவிடாமல் செய்து ஆதாயம் தேட பார்க்கிறார். 

ஆஸ்கார் , உலகத் தரம் என்றெல்லாம் வாய்ஜாலம் காட்டி நம்மை அவரின் வலைக்குல்லயே இருக்க வைக்கிறார். 
உன்னைப்போல் ஒருவனை ரீமேக் என்கிற பெயரில் குதறிவைத்திருப்பது ஒரிஜினலை பார்த்தவர்களுக்கு புரியும். 
உலகத்தரம் உலகத்தரம் என்று பேசுகிறாரே... தசாவாதாரத்தை உலகத்தரம் என்று கூறுவதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும். நீங்களே படம் பாருங்கள்.. கதையோடு ஒரு இடத்திலாவது உங்காளால் ஒன்ற முடிகிறதா என்று பாருங்கள்.... எதிலும் கமல் துருத்திக்கொண்டு முன்னால் வந்து "நான் அறிவாளி" நான் திறமைசாலி " என்று கூறுவதாகவே இருந்தது. 
அவர் பத்து வேடங்களில் நடித்திருக்கிறார். நல்ல முயற்சியே.. அதில் ஏதாவது ஒன்றோடு கூட நம்மாள் ஒன்றிப்போக முடியவில்லை.
இதே கமல் தான் இந்தியன் படத்தில் ஒரு வயதான பாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் கொஞ்ச நேரத்திற்க்கு பிறகு அந்த பாத்திரத்தோடு ஒன்றி, அது கமல் என்று யோசிக்காதவாறு படம் இருக்கும்.
ஆனால் தசாவாதாரத்தில் அப்படி இல்லை. 
அதே போல் உன்னை போல் ஒருவனும். இந்த கதையில் கமல் நடித்தததிலேயே படத்தின் முக்கிய சஸ்பென்ஸ் காலி. அப்புறம் என்னா.. படம் முழுக்க கமலையே பாக்க வேண்டியது தான்.
(இந்தியில் படம் முடியும் வரை ஷா வின் குணத்தை கணிக்கவே முடியாது)

உன்னைப்போல் ஒருவன் வெளியான சமயத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சியில்  கமலின் "லைவ்" இன்டர்‌வ்யூ இருந்தது. அதில் தொடர்ச்சியாய் அவரது நண்பர்களும் , பிரபலங்களுமே அழைத்து புகழ்ந்து, பாராட்டி தள்ளினார்கள், எப்படியோ ஒரு பெண் அதில் லைனை பிடித்து கமலிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார் "மிஸ்டர் கமல் Why you acted in the role of 
 Naseeruddin Shah that its too predictable " உடனே இவருக்கு வந்ததே கோபம்... வேக வேகமாய் எதையோ சொல்லி மழுப்பி முடித்துவிட்டார். 
இந்த சம்பததுக்கு இரண்டு மணி நேரம் முன்னால் அவருடைய நண்பர்களுக்கு எல்லாம் அழைத்து "இந்த மாறி லைவ் ஷோ இருக்கு. நீங்கள் எல்லாம் அழையுங்கள் என்று முன்கூட்டியே சொல்லி இருக்கிறார். 
அவர் அழைக்கும் போது காமிலின் நண்பரோடு (ஒரு பிரபல எழுத்தாளர்) எனது வாத்தியார் பேசிக்கொண்டிருந்தார் . அப்போது அழைப்பு வரவே அவர் "கமல் அழைக்கிறார் என்று பேசிவிட்டு" "இவ்வாறு அழைக்க சொன்னார்" என்றும் என் வாத்தியாரிடம் கூறியுள்ளார். அதன் பின், முன்னால் சொன்னது போலவே எழுத்தாளரும் அந்த  நிகழ்ச்சியில் கமலை புகழ்ந்துவிட்டு வைத்துவிட. எல்லாம் திட்டமிட்டது போல் நடந்துகொண்டிருக்கும் போது திடீர் என்று அந்த பெண் லைனில் வந்து கேள்வி கேட்டதும் தலீவர் சூடாகி விட்டார்"

"என்னவாக இருந்தாலும் நிரய புது விசயங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தது அவர்தான். அவர் இல்லையென்றால் தமிழ் சினிமாவே இல்லை. நம்மால் செய்ய  முடியாதை அவர் செய்கிறார். 
சினிமாவியே மூச்சாக, உயிராக கருதும் ஒருவரை பற்றி இவ்வாறு பேசாதே." என்று கோபமாக கூறுபவர்களுக்கு 

சினிமாதான் மூச்சென்று கருதும் நபர் அந்த சினிமாவிற்க்கு எவ்வளவு நேர்மையாய் இருந்திருக்க வேண்டும்.

கலையின் அடிப்படை நேர்மையே உண்மையாய் இருத்தல் தானே. "ஆமாம் இதில் இருந்து தழுவியது தான் இது" என்று சொல்ல அவரால் முடியவில்லை. "முயலவில்லை"
 எங்கிருந்து எல்லாம் சுட்டு அதில் 'பட்டி டிங்கரிங்' பார்த்து தம் பெயரை போட்டு புகழ் வாங்க வேண்டும் என்றே அவர் பார்க்கிறார்.

மிக முக்கிய குறிப்பு: என்ன தான் மிஷ்கினின் "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" அற்புதம். மிச்ஸ்கின் எனது குரு என்று நான் சொல்லிக்கொண்டு திரிந்தாலும். அவர் எடுத்த "நந்தலாலாவில்" அவர் "கிக்குஜிரோவில்" இருந்து சுட்ட வேலைகள் உண்டு. அதற்க்கு அவர் முறையான credits ஆவது கொடுத்திருக்க வேண்டும். ஆனால் திருட்டு அப்பட்டமாய் தெரிந்த பின்பும் அவர் அதை மூடி மறைப்பதிலேயே இருந்தது தவறு.
அதே போல் அவர் எடுத்த "முகமூடி" குப்பை என்பதையும் நான் ஒப்புக்கொள்வேன்.

கமல் செய்த திருட்டுக்ளுக்கு ஆதாரங்கள் உண்டு. அதை பாருங்கள். அதே போல் அவர் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தில் இருந்து வெளிவர பாருங்கள்.
உடனே திருப்பி என்னை திட்டாமல். கொஞ்சம் உங்கள் "பகுத்தறியும்" மூளையை பயன்படுத்தி ஆராய்ந்து பாருங்கள்.
உண்மைகள் கசக்கும். ஆனால் பொய்களை நம்பினால் என்றும் கிணற்றுக்குள் இருக்கும் தவளை போல் , கிணற்றையே கடல் என்று நம்பிக்கொண்டிருக்க வேண்டியது தான்.

பின் குறிப்பு: "அப்ப்டின்ன அவர் எதுவுமே நல்லதே செய்யலியா? . நீ அவர் செஞ்ச தப்ப மட்டுமே பாக்குற. அவர் செஞ்ச நல்லதை பாரு. போட மியிரு உன்னால குறை மட்டும் தான் சொல்ல முடியும் , மூஞ்ச அவர் மாறி படம் எடுத்து காட்டு" என்று கூறுபவர்களுக்கு, "இது அவர் மீதுள்ள விமர்சனம்" முடிந்தால் தர்க்கபூர்வமாய் விவாதிக்கவும். 

-ரசனை கெட்டவன்