Friday, 29 August 2014

எதார்த்தமான "மாஸ்"


விருமாண்டி படத்தில் ஒரு நீதிமன்ற காட்சி இருக்கும்.
தலைமறைவாய் இருக்கும் விருமாண்டியை ஊர்மக்கள் அடித்துக்கொள்ள கோபத்தோடு நீதிமன்ற வளாகத்தில் விருமாண்டியின் வருகைக்காக காத்திருப்பார்கள். அப்போது வக்கீல்  தனது காரில் மறைத்து விருமாண்டியை அழைத்து வருவார்.
மிக எதார்த்தமாக அந்த காட்சி படமாக்கப்ட்டிருக்கும்.
அந்த வக்கீலின்  வசனங்களாகட்டும் அதற்க்கு பின் விருமாண்டியின் ரியாக்ஷான்ங்களும் எதார்த்தமாக இருக்கும். 

விசாரணையின் போது விருமாண்டிக்கு திருமணம் செய்து வைத்த பூசாரி பொய் சாட்சியம் அளிக்கும் போது , அப்படியே தன் விரலில் இருந்து விருமாண்டி கொடுத்த மோதிரத்தை மறைப்பார்.
இது படம் பார்ப்பவருக்கு விருமாண்டியின் ஏமாற்ற மன நிலயை உணர்த்துவதற்க்காக அற்புதமாக காட்டப்பட்டிருக்கிருக்கும்.
அந்த இடத்தில் முழுதாய் விருமாண்டியின் ஏமாற்றத்தையும், கையால்காத சூழ்நிலையையும் உணருவோம். அதன் பிறகு விருமாண்டி அதை நினைத்து கண் கலங்கும் காட்சி உண்டு.
அப்போதும் படத்தின் இறுதியிலும் விருமாண்டி அழும்போது தனது துண்டையும் வேட்டியையும்  தூக்கி அதில் கண்களை துடைப்பார். இது மேலும் அந்த காட்சியின் நம்பகத்தன்மையையும் எதார்த்தத்தையும் அதிக்கப்படுத்தும்.

படத்தின் பலமே அந்த எதார்த்தம் தான். ஒவ்வொரு இடத்திலும் அந்த கதாபாத்திரம் கமல் இல்லை, விருமாண்டி தான் என்று நமக்கு உணர்த்தும். கமலின் சாயல் குறைக்கப்பட்டிருக்கும்.

அதே போல் "மாஸ்" என்று ஒரு வார்த்தை இப்போது பிரபலாமாகி வருகிறது . நடந்தாலே மாஸ் என்று காதை கிழிக்கும் இசையை போட்டு சுலோ மோஷனில் காட்டுகிறார்கள்.

நான் கடைசியாய் பார்த்த மாஸ் காட்சி என்றால் அது விருமாண்டி படத்தில் வரும் இறுதி சிறை சண்டை காட்சிகள் தான்.
அந்த கதவை உடைக்க எல்லாரும் அடுப்பை தூக்கி கொண்டு கிளம்பும் காட்சி தெரி..!.

அந்த சிறை சண்டை செம்ம விறு விறுப்பாய் இருக்கும் , அதற்க்கு காரணம் அதற்க்கு முன்னால் படத்தில் அந்த அளவுக்கான மாஸ் சீன்கள் (குறிப்பாய் சுலோ மோசனும் தெறிக்கும் இசையும்) இல்லை. அதற்க்கான தேவையும் இல்லை (ஆரம்பத்தில் விருமாண்டியின் கரண்ட்டு கம்ப குரங்கு சேட்டை தவிர்த்து). வேண்டும் என்றால் விருமாண்டியை பற்றி வெறும் வசங்களில் மட்டும் பெருமை பேசி விட்டு.. பல இடங்களில் மொக்கைத்தனமாக சுலோ மோஷன் போட்டு கைதட்டல் வாங்கி இருக்கலாம். ஆனால் படம் நன்றாக செதுக்கப்பட்டிருக்கும்.

அந்த நீதிமன்ற காட்சியையே இப்போது இருக்கும் தமாஸ் நடிகர்களை வைத்து மாஸ் காட்டுகிறேன் என்று எடுத்திருந்தால்....
"நீதிமன்றத்தில் வில்லன்களும் அவனது அடியாட்களும் விருமாண்டிக்காக கழுகுப்பார்வையோடு காத்திருக்க, அங்கே வரும் நீதிபதியின் வண்டியை மட்டும் பயத்தில் விட்டு விடுகிறார்கள்.
ரொம்ப நேரம் காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பும் வில்லனுக்கு முன்னால் அப்படியே நீதிபதிக்கு பின்னால் இருந்து ஹீரொ சுலோ மோஷனில் தலைகாட்ட ,இசை கிழிக்கும்.. விசில் பறக்கும்.. வில்லன் எதையாவது தூக்கி போட்டு உடைப்பார்..."

ஆனால் விருமாண்டி அப்படி இல்லை. செய்யாத தப்புக்கு தண்டனை பெரும் மனிதனின் அவலத்தை , மோசமான மனநிலையை , அவனது ஓட்டத்தை ஒவ்வொன்றாக கன்வே செய்து, அவன் பெரும் அடிகளை பார்வையாளனை நம்ப செய்து , அவன் காத்திருந்ததற்க்கான பலனாக அவனுக்கு கிடைக்கும் அந்த கடைசி வாய்ப்பின் போது அவனிடம் வெளிப்படும் ஆக்ரோஷம் தான் எதார்த்தமான "மாஸ்".

-சுஜித்

No comments:

Post a Comment