Saturday, 16 November 2013

வாழ்வில் மிகவும் ரசித்த , அனுபவித்த மரண வினாடிகள்:



இன்று இது நடக்கப்போகிறது , அது தவறான ஒன்றாக இருந்தால் இயற்கையாகவே பல தடங்கல்கள் வரும் , ஆனால் அதையும் தாண்டி இன்று மரணத்தை ரசித்து வந்தேன்.... 

இன்று கோவையில் இருந்து திருப்பூர் வர முதலில் பேருந்தில் வரலாம் என்று நானும் முகுந்தனும்  முடிவு செய்தோம் ஆனால் கோகுல் வருகிறான்  என்பதற்க்காக 'சரி.. பைக்கிலேயே போகலாம்' என்று முடிவுசெய்து கிளம்பினோம்.

சரி போகிறவழியில் எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம் என்று கிளம்பினோம்.
 முதலில் வந்த இரு 'பங்க்'குகளிலும் பெட்ரோல் இல்லை என்று அனுப்பி விட்டார்கள். வண்டி "ட்ரை" ஆகும் நிலையில் இருந்தது. கடைசியாய் ஹைவேயில் இருந்த ஒரு பங்கில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு தொடர்ந்தோம்.

மழை பெய்வது போன்ற அற்புதமான காலநிலை இருந்ததால் நின்று பேசிவிட்டு கிளம்பலாம் என்று ஒரு வயல்வெளி ஓரமாய் வண்டியை நிறுத்தி புகைப்படம் எடுக்க துவங்கினோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்துவிட்டது. மழை தூர தொடங்கியதால்  கிளம்பலாம் என்று அங்கிருந்து கிளம்பினோம். 

கிளம்பிய 10வது நிமிடத்திலேயே முழுதாய் நனைந்துவிட்டோம். தெக்களூர் பிரிவில் கோகுல் பிரிந்துவிட்டதால் , வஞ்சிப்பாளையம் வழியாய் வந்து முகுந்தானை வீட்டில் விட்டேன். 
வரும் வழியில் தான்

 "மாப்ள வண்டில இருந்து விழுந்து மூணு வருசத்துக்கு மேல ஆகுது டா.... 
யோசிச்சு பாரேன், விழுகும் போது அப்டியே அம்மா , அப்பா,... குடும்பமே... நம்ம கண்ணு முன்னால தெரியும் பாரு... அப்டி ஒரு அனுபவம் எங்கயுமே கிடைக்காதுடா..." என்று பேசிக்கொண்டு வந்தோம்.

அவனை இறக்கிவிட்டவுடன் எங்களுக்குள் நடந்த உரையாடல்:
முகு: டேய்.. உள்ள வந்து  தலைய துவட்டிவிட்டு, மழை நின்னதுக்கு அப்புறம் போடா

நான்: போடா வெளக்கென்ன... முழுசா நாலஞ்சத்துக்கு அப்புறம் எதுக்குடா முக்காடு...
 இப்டியா அழுத்தி புதுசான்னா நேர வீடு போய் தான் வண்டி நிக்கும்...

முகு: அப்டிங்கரியா...? சரி பாத்து போ...

நான்: சரி.. போய்ட்டு வரேன்....

அதுவரை முகுந்தன் ஓட்டிக்கொண்டு நான் பின்னால் அமர்ந்து வந்ததால் குளிர் தெரியவில்லை. நான் ஓட்ட தொடங்கியபோதுதான் உடம்பெல்லாம் விரைத்துவிட்டது.
எப்படியோ சமாளித்து வீட்டுக்கு பக்கத்தில்... இன்னும் 2 கிமீ போனால் வீடு..

மெயின் ரோட்டில் இருந்து இடது புறமாய் திரும்பி நேராக வந்தால்  "யூனிவர்சல்" திரையரங்கம் கண்ணுக்கு பட்டது.
 அங்கே ஒரு இந்தி படம் ஓடிக்கொண்டு இருந்தது.
"அடப்பாவிகளா அதுக்குள்ள "ராவண தேசத்தை" தூக்கிட்டீங்களேடா என்று வருத்தப்பட்டுவிட்டு...

 இடது பக்கம் வலையும் சாலையில் திரும்புகிறேன் முன்னால் பள்ளத்தில் மொத்தமாய் தண்ணீர்...
" எங்க குளி இருக்கும்ணே தெரியையே..?"
 என்று  அதை லாவகமாய் கடந்து முன் பக்கம் பார்த்தால் மற்றுமொரு பள்ளம்... 
வண்டியின் வேகம் 60கிமீ இருக்கும்...
 அந்த பல்லத்தில் நடக்கக்கூடாது எண்டுறு ஒருவர் வலது பக்கமாய் கிட்டத்தட்ட நாடு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருததார்.... 
அவரை பார்த்தவுடன் ஒரு நொடி.....
.
.
"அண்ணாஆஆஆ......
வண்டியை இடப்புறமாய் திருப்பி அங்கிருந்த குழியில் வண்டியை விட்டு அப்டியே ரோட்டில் இரண்டு கைகளும் தர தர என தேய்துக்கொண்டு "பொத்" என விழுந்தேன்...
என் முதுகில் லாப்டாப் பை.
 முன்னால் நெஞ்சில்  காமிரா பை நசுங்குகிறது... 
என்முகம் தார் சாலியோடு  ஒட்டி கிடக்கிறது.... 

ஒரு நொடி தான் "கீச்....." என்று ஒரு சத்தம்... 
திருபுகிறேன்...
பின்னால் வந்துக்கொண்டிருத்த ஒரு டெம்போவின் முன் சக்கரம் என் முகத்துக்கு நேராய் உள்ளது..
இரண்டு அடி கூட இருக்காது.... 
நான் விழுந்ததையே அப்போது தான் சுதாரிக்கிறேன்...
டெம்போ நின்று விட்டது...
யாரோ பின்னால் ஓடுகிறார்கள்....
நான் அந்த சக்கரத்தையும் சாலையயும் பார்க்கிறேன்....

அம்மா , அப்பா... யாருமே கண் முன் வரவில்லை...
எனக்கு அப்படியே அங்கேயே படுத்து தூங்கிவிடலாம் போல் இருந்தது....
சுதாரித்துக்கொண்டேன் நான் சாகவில்லை என்று... 
ஆனால் எழுந்திரிக்க மனம் வரவில்லை...
எனக்கு "நான் இன்னும் வாழப்போகிறேன்" என்று சந்தோசம்... சிரிப்பு வருகிறது....

பின்னால் இருந்து யாரோ வண்டியை தூக்கிவிட்டு... 'தம்பி எந்திரிங்க' என்று வந்து தூக்கினார்....'

"ஆனால் வாழ்வில் எனக்கு இப்படி ஒரு ரசனை வந்ததே இல்லை...
எனக்கு அங்கயே படுத்து உறங்க வேண்டும் போல் இருந்தது....
 அவ்வளவு நிம்மதியாய்...."

எழுந்து உள்ளங்கையை தான் முதலில் பார்த்தேன்... ஒரு காயம் கூட இல்லை....
என்னை தூக்கிவிட்டவரை பார்த்து ஒரு சின்ன சிரிப்பு சிரித்து "நன்றி அண்ணா என்றேன்"

அதற்க்கு பின் எப்போதும் போல் நல விசாரிப்புகளோடு... 
'தம்பி நான் வேனா வீட்ல கொண்டு வந்து விடவா...?
   "இல்ல வேணாம் நா.... நான் போய்க்கிறேன்..." என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து முட்டியில் இருந்த சிறு காயத்துக்கு மட்டும் மருந்து போட்டுவிட்டு...

அங்கே நடந்ததை மீண்டும் நினைத்துப்பார்த்தேன்.... 
அட இவ்ளோ தாண்டா வாழ்க்கை... 
அதுக்குள்ள எத்தன போராட்டம்....
மனச நிம்மதியா வச்சிருந்தா மரணம் கூட சினிமா மாறி ரசிக்க முடியும் என்று தோன்றியது...

உணர்வு - சுஜித் நா சுப்பு 





Sunday, 10 November 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  "குறியீடுகள்"- பகுதி 1



இந்த வருடத்தின் சிறந்த படம் - ஓநாயும் ஆட்டுக்ட்குடியும் 
படத்தில் நான் மிகவும் வியந்து பார்த்தது "படத்தில் நிறய "குறியீடுகள்" இருந்ததைத்தான்"
நிறய "SYMBOLIC SHOTS'...
நேரடியாக ஒரு விசயத்தை சொல்லாமல் மறைமுகமாக அதன் பொருளை உணர்த்தும் காட்சிகள் பல.
நான் நான்கு முறை படத்தை திரையரங்கில் பார்த்தேன்.
ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் புதிதாய் ஒன்றை கற்றுக்கொண்ட, தெரிந்துகொண்ட அனுபவம்.
ஒவ்வொன்றையும் பற்றி விரிவாய் எழுதவேண்டும் என்று உள்ளேன்.
அவற்றில் ஒன்று இப்பொழுது:

மிஷ்கினுக்கு ஆபரேசன் செய்வதற்க்காக அனைத்தயும் தயார் செய்து விட்டு உடலை கிழிக்கலாம் என்று ஸ்ரீ அருகில் வருவார் ஆனால் அவரால் அது முடியாது, பதட்டப்படுவார்...
உடனே சில மருத்துவ புத்தகங்களை புரட்டுவார்,
அவருடய பேராசிரிய மருத்துவரை அழைத்து இதை பற்றி கூறுவார்...
முதலில் மறுக்கும் பேராசிரியர் பின் ஸ்ரீக்கு ஆலோசனை கூறுவார்.
இப்பொழுது மீண்டும் நம்பிக்கையோடு உடலை கிழிக்க முன்வருவார் ஸ்ரீ.
பின் "ஆபரேசன் சக்ஸஸ்"

இந்த காட்சியை நீங்கள் கவனித்தல் புரியும்.
ஸ்ரீ உடலை கிழிக்க வரும் இரண்டு இடங்களிலுல் ஒரே ஷாட்டுகள் இருக்கும்.
-->முதலில் அவர் பதட்டத்தில் வரும் ஷாட்டில் அவர் முகம் தெளிவில்லாமல் "OUT OF FOCUS"ல் இருக்கும்.
பொருள்: அந்த செயலை செய்ய அவரிடம் தெளிவும் , நிதானமும் இல்லை என்பது.

--> அதுவே பேராசிரியர் ஆலோசனை கூறியபின்பு உடலை கிழிக்க வரும் ஷாட்டில் முகம் தெளிவாய் "FOCUS"ல் இருக்கும்.
பொருள்: இப்பொழுது அவருக்கு நல்ல தெளிவும் , நம்பிக்கையும் கிடைத்துள்ளது என்பதாகும்.

(அந்த ஷாட்டின் snapshots இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன)

இன்னும் இயக்குனரை "ஜீனியஸ்" என்று எண்ணிய காட்சிகள்  உண்டு அவற்றை பற்றி விரைவில் எழுதுகிறேன்.
நன்றி!

-சுஜித் நா சுப்பு
(REVIEW THETAER )

படித்து , பிடித்திருந்தால் "SHARE" செய்யவும் 



Friday, 8 November 2013




ஆரம்பம் - சில முரண்பாடுகள்



முன் குறிப்பு: நான் அஜித் எதிர்ப்பாளன் கிடையாது. நடுநிலையாய் இந்த பதிவை எழுதுகிறேன்... "ஸ்டார் காஸ்டுக்காக இல்லாமல், நல்ல படங்கள் பார்க்கவேண்டும் என்று எண்ணி பலமுறை நொந்துபோன "நல்ல சினிமாவுக்கான" ரசிகன். 

இந்த பதிவை எழுதுத முக்கிய காரணம் "அஜித்தை தவிர வேறு எதுவுமே இல்லாத படத்தை அனைவரும் ஆஹா! ஊஹோ! என்று தூக்கி வைத்து கொண்டாடுவதே". (இதிலும் அஜித் நடிக்கவில்லை என்பது 'ஒரு நல்ல சினிமாவை "எதிர்பார்த்து" படத்துக்கு போனவர்களுக்கு தெரியும்')
 
படத்தில் உருப்படியான ஒரே விசயம் "தரமற்ற புல்லெட் ப்ரூஃப் ஜாக்கெட் ஊழல் பற்றி பேசியிருப்பதும், மும்பை தாக்குதல் போன்ற சில காட்சிகள் இருப்பது மட்டுமே"

மற்றபடி படத்தில் இருக்கும் அனைத்துமே நாம் முன்னரே பல படங்களில் இதைவிட பரபரப்பாய் பார்த்தவையே.

 அதுவும் உலகமாக லாஜிக் ஓட்டைகளோடு இருக்கும் 'துபாய் பாங்க் சீன்'.
 இந்த மாறி எத்தன சீன் ஹாலீவுட் படங்களில் பார்த்திருக்கிறோம் அதுவும் எவ்வளவு பரபரப்பானவையாக. 
பல தமிழ் படங்களில் கூட இது "போன்ற" கட்சிகள் உண்டு.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான "MISSION இம்பாஸிபல் : கோஸ்ட் PROTOCALL) படத்தில் எவ்வளவு பரபரப்பாக இதே போல் ஒரு கட்சி இருக்கும். இருக்கும்.

 இந்த காட்சி என்று மட்டும் இல்லை படத்தில் பல காட்சிகலை இயக்குனர் இன்னும் சிறப்பாய், புதுமையாய் , பரபரப்பாய்  செய்திருக்கலாம்.
படத்தில் கதை, திரைக்கதைக்கு இயக்குனர் மெனக்கெடவே இல்லை என்று தெரிகிறது. அதுவும் நன்றாக யோசித்து பார்த்தால் உங்களுக்கே தெரியும் படத்தின் இரண்டாம் பாதி கிட்டத்தட்ட 'விஜய்  நடித்து மெகா ஃப்லாப் ஆன "வில்லு" படத்தின் இரண்டாம் பாதி என்று.
அதுவும் க்ளைமாக்ஸ் மற்றும் சில காட்சிகள் 'விஜய்காந்த் படத்திலும் , அர்ஜூன் படத்திலும் பலமுறை.....

 " முடியல...............!"

ஆனால், "அஜித்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன காட்டினாலும் மக்கள் கை தட்டி விடுவார்கள் என்பது போல் படம் உள்ளது.
"இது மக்களை முட்டாள்கள் என்று அவர்கள் நினைத்துக்கொண்டு செய்வது போல் உள்ளது."

சரி அஜித் உள்ளாரே அவரையாவது நடிக்க விட்டிருந்தால் பரவாஇல்லை. 
"தலையா ஆட்டுவாரு....
சும்மா வந்து நிப்பாரு...
 இரண்டு வரி பேசுவாரு...
 கண்ணாடியா  கலட்டுவாரு....
, கண்ணாடியா மாட்டுவாரு...
 மொறச்சுக்குட்டே கத்துவாரு.... " 
இதை தவிர அவர் வேறு எதுவும்  செய்ததாக தெரியவில்லை.

எனக்கு தெரிந்து அவர் கடைசியாய் "நடித்த" படம் "வராலாறு" என்று நினைக்கிறேன்.
அதில் அற்புதமாய் நடித்திருந்தார். இவ்வளவு திறமை உள்ளவரை சும்மா நிக்கவிட்டு படத்தை ஓட்டிவிடலாம் என்று நினைக்கின்றனர்.

இந்த பதிவை எழுத்தும்போது கூட என் நண்பர் 'படத்தை பற்றி என்ன வேண்டுமானாலும் எழுது.. ஆனால், அஜித்தை பற்றி எதுவும் எழுதாதே... "அவர் ரொம்ப நல்ல மனுசன் தெரியுமா.." என்றார்....

அட.. அவர் நல்ல "மனுசன்" தானுங்க... அதுக்குனு அவர் நிக்கறதுக்கு எல்லாம் கை தட்ட முடியுமா...?

இன்னொரு நண்பர் "இப்டி எல்லாம் பேசாதா.. இது அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம்... உனக்கு பிடிக்கலைனா பாக்காத...." என்கிறார்....

அட சாமி... பில்லா 2 படத்திலும் அஜித் இது போல் தான் நடந்தார்... ஆனால் அதில் கூட பரவா இல்லை.... நல்ல இருந்தது.... 
ஆனால் 'ஆரம்பத்தில்' "மாஸ்" காட்டுகிறேன் என்று செய்வது எல்லாம் புஸ் என்று உள்ளது.

அட... ரசிகர்களுக்கு அவர்களுக்கு பிடித்த நடிகர் எது செய்தாலும் பிடிக்கும், 
(உதாரணம்: என் நண்பர் ஒருவர் விஜய் ரசிகர்... கிட்டத்தட்ட 10 முறை "சுறா" படம் பார்த்து இருக்கிரார்ர்....  "தலைவா" 10க்கும் அதிகம்)
  ஆனால், ஒரு நல்ல படம் எதிர்பார்த்து வரும் 'ரசிகர் இல்லாத' பொதுஜனாத்தின் நிலை என்ன.... 
"மண்டை காய்ந்து போய் விடும்....."

இந்த படம் என்று மட்டும் இல்லை விஜய் நடித்த தலைவாவும் இதே போல் தான், விஜையை வைத்து எதை காட்டினாலும் "முட்டாப்பய" மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நாம் தமிழ் சினிமாவில் பார்த்து அழுத்துப்போன சீன்களை மீண்டும் எடுத்திருந்தார்கள்.
அதையே தான் இதிலும் அஜித்தை வைத்து செய்துள்ளனர்... ஆனால் "ஏ.எம்.ரத்னத்தின்" அதிர்ஷ்டம் படம் நன்றாக வசூல் செய்கிறது.... 
ஆனால் படத்தில்தான் ஒன்ற்ம் இல்லை....

இனிமேலாவது "மாஸ்" என்கிற பெயரில் இப்படி 'கொல்லாமல்'  நல்ல படம் கொடுப்பார் "அஜித்" என்று  நம்பிக்கையோடு முடிக்கிறேன்.

பின் குறிப்பு: இந்த தீபாவளிக்கு வெளியான "பாண்டிய நாடு  சுமாராக இருந்தாலும் ... ஆரம்பத்தோடு  ஒப்பிட்டால் எவ்வளவோ பரவா இல்லை.... 

இதை பற்றிய உங்கள் பதிவுகள் (COMMENTS) வரவேற்க்கப்படுகின்றன
நன்றி!
- சுஜித் நா சுப்பு 
(REVIEW THEATER)

Sunday, 3 November 2013




பாண்டிய நாடு - திரைப்பட பார்வை
இயக்கம் - சுசீந்திரன் 













இயக்குனர் சுசீந்திரனின் முந்தய நல்ல படங்களாலும் (ராஜபாட்டை தவிர்த்து), 
அவருடய கடைசி படம் 'ஆதலால் காதல் செய்வீர்' மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்த காரணத்தாலும், இந்த தீபாவளிக்கு வெளியான படங்களில் இந்தப்படத்தின் டிரைலர் மட்டும் தான் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்த காரணத்தாலும் , இந்த தீபாவளிக்கு "பாண்டியநாடு" மட்டுமே பார்ப்பது என்று முடிவு செய்து படத்துக்கு போனேன்.

அண்ணனை கொன்ற வில்லனை பழிவாங்க துடிக்கும் 'தம்பியும்' , தான் மகனுக்கு நடந்தது போல் வேறு யாதுக்கும் நிகழாக்கூடாது என்று வில்லனை கொள்ள துடிக்கும் தகப்பனும் வாசிக்கும் இடமே "பாண்டிய நாடு"

ஒரு கமெர்ஷியல் ஹிட் கொடுக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் சுசீந்திரன் படம் செய்திருப்பது தெரிகிறது.
முந்தய விஷாலின் படங்களை போல் ஐம்பது பேரை அதுக்கும் சண்டாயும், கேட்கவே முடியாத "பன்ச்" வசனங்களும் இல்லாதது பாண்டியனத்தை ரசிக்க வைக்கிறது.

விஷாலின் நடிப்பு எப்போதும் போல் "ஓகே".
பாரதிராஜாவை சரியாக பயன்படுத்தியுள்ளனர். மகனை இழந்து அவர் காதரும் கட்சியும், கொன்றவனை ஏதாவது செய்யவேண்டும் என்று புலம்பும் கட்சியும் அற்புதம்.
அண்ணனாக வரும் "ஆரண்ய காண்டம்" சோமசுந்தரம் நன்று. பெரிதாய் அவருக்கு நடிக்க வாய்ப்பில்லை.
வில்லனிடம் அரைவாங்கி தீரும் கட்சியில் நடிப்பு அற்புதம்.
கமர்சியல் படத்துக்கு ஒரு கதாநாயகி வேண்டும் என்பதற்க்காக லக்ஷ்மி மேனனும், தேவை இல்லாத இரண்டு பாடல்களும்.

முதல் பாதியில் வரும் காதல் கட்சிகளாலும், இரண்டாம் பாதியில் நீளமாய் வரும் துரத்தல் காட்சிகளும் கொஞ்சம் அலுப்பை ஏற்படுத்திக்கின்றன.
வில்லன் நடிகர் (பெயர் தெரியவில்லை) கட்சிதம்.

வில்லனை கொள்ள விஷால் செய்யும் வியூகங்கள் நன்று.
அதே நேரத்தில் இயலாமையால் 'பாரதிராஜா செய்யும்' செயல்களும் மனம் நெகிழ வைக்கும்.
சூரியின் காமெடீ "ஓகே" ரகம்.

படத்தின் ஒளிப்பதிவு நன்று. இரண்டாம் பாதியில் வரும் சண்டை காட்சியில் ஒளி அமைப்பு நன்று ஆனால் முதல் பாதியில் சில கட்சிகளில் அதிக்க வெளிச்சம் தெரிகிறது.
படத்தின் தொடக்கத்தில் வரும் பாடலும் அதற்கான ஆட்டமும் மிக நன்று.

சுசீந்திரனிடம் இருந்து ரொம்ப வித்யாசமான படத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான்.
மசாலா படங்களுக்கான விசயங்கள் அனைத்தும் இதிலும் உண்டு.
என்னதான் பழய பழிவாங்கும் கருதான் என்றாலும் இதில் கொஞ்சம் புதுமையோடு , கொஞ்சம் எதார்த்தமும் சேர்ந்து இருப்பதால் பாண்டியநாட்டை ரசிக்கலாம்.
நன்று.

-சுஜித் நா சுப்பு
www.facebook.com/ReviewTheater

Tuesday, 29 October 2013

ஒரு இயக்குனர் ஒரு படைப்பை தர எவ்வளவு சிரமங்களையும் கஷ்டங்களயும் கடந்து வெற்றி பெறுகிறார் என்பதற்க்கு "நவீன்" ஒரு உதாரணம். 

(படித்து பயன் பெறுங்கள், பிறர் பயன் பெற SHARE செய்யுங்கள்)


இயக்குனர் நவீன் தன் மூடர் கூடம் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான விசயங்கள் பற்றியும் அவர் சந்தித்த பிரச்சனைகள் பற்றியும், அவற்றை எப்படி எதிர்கொண்டு மீண்டார் என்பது பற்றியும் நிரய பேசினார்.

அவர் பேசியதில் இருந்தே தன் படத்திற்க்காக அவரும் அவருடய குழுவும் எவ்வளவு தேடி உள்ளனர் , எவ்வளவு பயணம் செய்துள்ளனர் என்பது தெரிந்தது.

இவர்களிடம் பணம் கம்மியாக இருந்ததால் படப்பிடிப்பை சிக்கனமாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
மூடர் கூடம் படம் 90% கோயம்பத்தூரில் எடுக்கப்பட்டது.
அங்கே ஒரு சிறிய இரண்டு பெட்ரூம் வீட்டில் மொத்த படக்குழுவும் தங்கி உள்ளது. அது மட்டும் இல்லாமல் அனைத்து பட பிடிப்பு சாதனங்களும் அதனுள் அடக்கம்.
முடிந்தவரை படப்பிடிப்பு நடப்பதே தெரியாத அளவிற்க்கு படத்தை எடுத்து முடித்துள்ளனர்.
படத்தில் நிரய காட்சிகள் பங்களா வீடு சம்பந்தப்பட்டு வருவதால் நிரய வீட்டுக்காரர்களிடம் பேசி , நிரய வீடுகள் தேடி, 'படம் எடுக்க கொடுக்கமாட்டேன்' என்று கூறிய பலரது கால்களில் விழுந்து, காலில் விழுந்துவிடுவதாக கெஞ்சி/மிரட்டி கடைசியில் OK செய்துள்ளனர்.

சலீம் பாயின் Costumeக்காக 'கோட்' எடுக்க சென்று பணம் இல்லாத காரணத்தால் அது வித்தியாசமான, அற்புதமான காஸ்ட்யூம் செட் அப்பாக மாறிய கதையும் , நாய்க்குட்டி பாடல் சாதாரண வீட்டு வாசலில் இருந்து stylish பாக் ட்ரொப்புக்கு மாறிய கதையும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யங்கள். (வாய்ப்புகிடைத்தால் இந்த கதைகளை பற்றி எழுதுகிறேன்)

அவர் பேசியதில் மிக முக்கியமானவை,
>>"ஒரு விசயத்தை செய்யவேண்டும் என்று முடிவு செய்தால், அதை உடனே செய்து விடு"

>>"ஒரு கதவு சாத்தப்படுகிறது என்றால் மற்றொன்று திறக்கப்படுகிறது என்று அர்த்தம்"

>>'அவ்வளவு தான்..! முடிந்தது என்று நினைக்காமல், அடுத்து என்ன நல்லதாக பண்ணலாம் என்று யோசிக்கத்தொடங்கு..."
இன்னொன்று அவர் கூறியது , "நாம் தேடுவதும், படைப்பதும் மலிவாக இருந்தாலும் அது சிறப்பாக இருக்கவேண்டும்" 



படத்தின் தொடக்கம் முதல் ஒவ்வொரு வேலை படக்குழுவில் அனைவருக்கும் உணவழிப்பது வரை அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி இன்று நவீன் வெற்றி கண்டுள்ளார் என்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் .

இவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் இன்று அவை அனைத்தயும் நினைத்து நவீன் சிரிக்கிறார். வாழ்க்கையை பற்றி பேசுகிறார்.
நம் வாழ்க்கையும் அப்படிதான் ஒருகட்டத்தில் சாகும் நிலைக்கு தள்ளும், அதை கடந்து வந்து திரும்பி பார்த்தால் சிரிப்பாய் இருக்கும்.


இதுவும் கடந்து போகும்!
வெற்றி தாமதமாகலாம் , ஆனால் தவறாது.
வெற்றி நிச்சயம், பயணித்துகொண்டே இருப்போம்!


-சுஜித் நா சுப்பு
(REVIEW THEATER)


இது (27-08-2013)அன்று நடந்த "MEET THE FILM MAKERS" நிகழ்ச்சியில் அவர் பேசியது.
இந்த அற்புதமான நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கிய இயக்குனர் கமலக்கண்ணன் மற்றும் "சினிமா கிளப் ஆப் கோயம்பத்தூர்" குழுவிர்க்கும் என் நன்றிகள்